மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர்
தமிழர் திருநாள் மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு வருகின்ற 15ஆம் தேதியன்று மதுரை மாநகர் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது அதேபோல மதுரை மாவட்டம் அன்று பாலமேட்டில் 16ஆம் தேதி அன்றும் அலாங்காநல்லூரிலும். 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன இதில் கலந்து கொள்வதற்காக காளைகள், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிகட்டினை காண்பதற்காக சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலிருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேற்படி இடங்களில் கூடுவதை முன்னிட்டு, அப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாதவாறு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தலா 2000 காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தவும், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதணை செய்யும் இடங்களிலும், மற்றும் காளைகள் அவிழ்த்துவிடும் வாடிவாசல்,
பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அமரும் இடங்கள் மற்றும் முடிவில் காளைகளை அழைத்துச் செல்லும் இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து எவ்வித அசம்பாவிதமின்றியும், சிரமமின்றியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டி இன்று தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் Dr.மகேஷ்வாதயாள்,சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன்,மதுரை சரக காவல்துறை துணை தலைவர் Dr.அபினவ்குமார்,மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், ஆகியோர்களுக்கு அறிவுறை வழங்கினார்கள்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0