சட்டம் அனைவருக்கும் சமமா?குடிபோதையில் நடிகர் – பலியான லாட்டரி வியாபாரி”

Jan 6, 2026 - 13:24
Jan 6, 2026 - 13:31
 0  4
சட்டம் அனைவருக்கும் சமமா?குடிபோதையில் நடிகர் – பலியான லாட்டரி வியாபாரி”
சட்டம் அனைவருக்கும் சமமா?குடிபோதையில் நடிகர் – பலியான லாட்டரி வியாபாரி”

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த தங்கராஜ் என்பவர் குடும்பத்தின் ஒரே ஆதாரம்.கொட்டயம் நகரில் லாட்டரி சீட்டுகள் விற்று, நாள் சம்பளத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரு சாதாரண மனிதன்.அந்த மனிதனின் வாழ்க்கை,  குடிபோதையில் வந்த விளைவினால் வாகன விபத்தில் ஒரு நொடியில் சிதறியது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மலையாள சீரியல் நடிகர் சித்தார்த் என்பவர் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஒட்டி வந்தவர்  தங்கராஜை இடித்ததாக கூறப்படுகிறது. சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.அதிர்ச்சியானது இதோடு முடிவடையவில்லை.கீழே விழுந்த தங்கராஜுக்காக பேச வந்த உள்ளூர்வாசிகளை நடிகர் அவதூறாகப் பேசியதாகவும்,விபத்துக்குப் பொறுப்பேற்காமல் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நடிகர் சித்தார்த்தை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்ற பொதுமக்களுக்கு எதிராக, திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலர் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

அவர்களின் வாதம் ஒன்றே —

“ஒரு நடிகரின் சுதந்திரம் தடுக்கப்பட்டது”

ஆனால் மறுபுறம் மக்கள் கேட்கும் கேள்வி மிகவும் நேர்மைமிக்கது:

 “ஒரு சாதாரண மனிதனின் உயிர் போனது… அதற்கு யார் பொறுப்பு?”

குடிப்பழக்கம் தனிப்பட்டது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குற்றமல்லவா?

குடிப்பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டி, அப்பாவி மக்களின் உயிரை பறிப்பது எவ்வகையில் நியாயமாகும்?

ஒரு வாரம்… உயிருக்கும் மரணத்துக்கும் நடுவே விபத்துக்குப் பிறகு, கொட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கராஜ்,ஒரு வாரம் முழுவதும் மூச்சுத் திணறி உயிருக்காக போராடினார் .இறுதியில், உயிர் தாங்காமல் பரிதாபமாக காலமானார்.

சட்டம் அனைவருக்கும் சமமா?

இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது:

நடிகர் என்றால் சட்டம் தளர்வா?

குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா?

தங்கராஜின் குடும்பத்துக்கு நீதி கிடைக்குமா?

✍🏻 பிரபஞ்சன்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor