குடிநீர் வீணாவதை தடுக்க கவன ஈர்ப்பு பதாகை.திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மக்கள் நலனின் முயற்சி
திருச்சி பொன்மலைப்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள ஜெயில் காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகே, குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக பல மாதங்களாக குடிநீர் தொடர்ந்து வீணாகி வரும் அவலம் பொதுமக்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்கக் கோரி, கடந்த மாதமே திருச்சி மாநகராட்சிக்கு கடிதம் எழுதிய போதும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் அந்த இடத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பதாகைகளில்,
“தண்ணீரை வீணாக்காதீர்கள்”,
“தண்ணீரை சேமிப்போம்”,
“சாக்கடைக்கு எதற்கு நல்ல நீர்?”
போன்ற வாசகங்கள் இடம்பெற்று, குடிநீர் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்த விவகாரத்தில், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து, இனி குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த கே.சி. நீலமேகம்,
மாநிலப் பொருளாளர் – மக்கள் சக்தி இயக்கம்,
செயல் தலைவர் – தண்ணீர் அமைப்பு, திருச்சி,
“குடிநீர் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரம். அதை அலட்சியப்படுத்துவது எதிர்கால தலைமுறையின் உரிமையை பறிப்பதற்கு சமம். நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், குடிநீர் வீணாவதைத் தடுக்கும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த பொறுப்புணர்வான சமூக முயற்சியாக பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0