தமிழகத்திலே முதல்முறையாக: திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தொடரும் இலவச BP, Sugar மருத்துவ முகாம்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 14-வது மாத இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்படும் மக்கள் நல முயற்சி
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், தமிழகத்திலேயே முதல்முறையாக துளசி பார்மசி நிறுவனத்துடன் இணைந்து, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவச BP மற்றும் Sugar (ரத்த அழுத்தம், சர்க்கரை) பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் நலத் திட்டம் கடந்த 2024 நவம்பர் மாதம், மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது 14-வது மாத BP / Sugar பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
மேலும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் ஜலதோஷம் மற்றும் மூச்சுத் தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இம்முறை முகாமில் நுரையீரல் பரிசோதனை (Lungs Test)யும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த இலவச மருத்துவ முகாம் 2026 ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து 14 மாதங்களாக இடையறாது நடத்தப்பட்டு வரும் இந்த மருத்துவ முகாம், சட்டத்துறையினரின் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மாதிரிப் பொதுநல முயற்சியாக சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1