சேலம் வடக்கு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளராக ராமன் (பிரபாவளவன்) அறிவிப்பு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி
சேலம், ஜனவரி 8:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் – வடக்கு தொகுதி மாவட்ட செயலாளராக ராமன் என்கிற பிரபாவளவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில், வடக்கு தொகுதி மாவட்ட செயலாளர் ராமன் (பிரபாவளவன்) தலைமையில், வடக்கு மாவட்ட பொருளாளர் அசோக் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து, சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்கும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
இதனை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக அம்பேத்கர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு சென்று, மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில்,ஜெயச்சந்திரன்,
மண்டல செயலாளர் நாவரசன்,
முன்னாள் மாவட்ட செயலாளர் காஜா மைதீன்,
மண்டல செயலாளர் வேலுநாயக்கன்,
மேட்டூர் மெய்யழகன்,
மாவட்ட செயலாளர் சௌபாவேந்தன், ஆறுமுகம் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் வடக்கு தொகுதியில் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வு, கட்சி வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0