திருச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கான சிறப்பு சுகாதார முகாம் – 300-க்கும் மேற்பட்டோர் பயன்
திருச்சி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் உடல்நலக் கவனத்தை மேம்படுத்தும் நோக்கில், பொது நலன் சார்ந்த சிறப்பு சுகாதார முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களின் ஏற்பாட்டில், துளசி பார்மசி இணைந்து இந்த மாதாந்திர சுகாதார முகாமை நடத்தினர்.
இந்த முகாமில், ரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை (Sugar) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பங்கேற்றவர்கள் தங்களின் BMI (Body Mass Index) அடிப்படையில் உடல் எடை சரியான அளவில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் எடை மற்றும் உயரம் அளவிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது நிலவும் பருவ மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, முகாமில் நுரையீரல் பரிசோதனை (Lungs Test) சிறப்பாக நடத்தப்பட்டது. இதன் மூலம் நுரையீரல் செயல்திறன் குறித்த ஆரம்ப நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு சுகாதார முகாம் 09.01.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற பணிக்காக வந்த காவலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நீதித்துறை சார்ந்த பணிகளில் தொடர்ச்சியான மன அழுத்தம், நேரப் பற்றாக்குறை போன்ற சூழல்கள் நிலவுவதால், இத்தகைய சுகாதார முகாம்கள் உடல்நலக் கவனத்தை அதிகரிப்பதுடன், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுவதாக பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இம்முகாம் தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததுடன், இதுபோன்ற பொது நலன் சார்ந்த முயற்சிகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0