திருச்சியில் 8.36 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு. 1,302 நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் தீவிரம் ஜனவரி 13 வரை பரிசுத் தொகுப்பு வழங்கல்
திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8 லட்சத்து 36 ஆயிரத்து 824 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகப் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.மாவட்டத்தில் உள்ள 1,302 நியாயவிலைக் கடைகள் மூலம்,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,
முகாம்களில் தங்கியுள்ள 980 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறுவது:
1 கிலோ பச்சரிசி
1 கிலோ சர்க்கரை
முழு கரும்பு – 1
ரூ.3,000 ரொக்கம்
விலையில்லா வேட்டி, சேலை
வீடு, வீடாக டோக்கன் விநியோகம் நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று,பொங்கல் பரிசு வழங்கப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்களுடன் டோக்கன்களை வழங்கி வருகின்றனர். ஜனவரி 8 (வியாழக்கிழமை) வரை டோக்கன் விநியோகம் நடைபெறும்.ஜனவரி 13 வரை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.பணியில் 950 பணியாளர்கள்.இந்தப் பணிக்காக மாவட்டம் முழுவதும் 950 நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஒரு நாளுக்கு, ஒவ்வொரு கடையிலும் 300 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
புகார்கள், தகவல்களுக்கு தொடர்பு எண்கள்:
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலில் ஏதேனும் புகார்கள் இருந்தால்,சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள்,வட்ட வழங்கல் அலுவலர்கள்,ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.
தொடர்பு எண்கள்:
0431 – 2411474
94450 45618
கட்டணமில்லா எண்கள்: 1967, 1800-425-5901
இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0