திருச்சிக்கு அமித்ஷா வருகை | பாஜக பிரசார நிறைவு விழா, ஆலோசனை, கோயில் தரிசனம்

அமித்ஷா/ திருச்சி

Jan 4, 2026 - 15:58
Jan 4, 2026 - 16:53
 0  7
திருச்சிக்கு அமித்ஷா வருகை | பாஜக பிரசார நிறைவு விழா, ஆலோசனை, கோயில் தரிசனம்

திருச்சி:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வருகை தந்தார்.

திருச்சி வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு பயணம் மேற்கொண்டார். திருச்சி–புதுக்கோட்டை சாலையில் உள்ள பாலன் நகர், பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து, சாலை வழியாக திருச்சிக்கு திரும்பும் அமித்ஷா, ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பின்னர், அதே விடுதியில் இரவு தங்குகிறார்.

திங்கள்கிழமை காலை, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் அவர், சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’வில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து, பகல் 1.20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் அமித்ஷா, அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமித்ஷாவின் இந்த இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணம், பாஜக அரசியல் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor