திருச்சி M. A. M கல்வியியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா
திருச்சி M. A. M கல்வியியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், திருச்சி மண்டலம் கல்லூரி கல்வி இணை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், M. A. M கல்வியியல் கல்லூரி தாளாளர் பெருந்தகை எம்.ஏ. பாத்திமா மன்சூர், செயலர் பெருந்தகை எம். ஷேக் மன்சூர், கல்வி முதன்மை செயலாளர் எஸ்.எம். அசர் ஜமால் பீர் முகமது, துணை செயலாளர் எஸ்.எம். அஃப்ரா நூறு நிஷா, முதல்வர் முனைவர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.
விழாவில் ஆண், பெண் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த பட்டமளிப்பு விழா, மாணவ, மாணவிகளின் கல்வி பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0