"உங்க கனவ சொல்லுங்க” திட்டம்: திருச்சியில் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் விழா"

Jan 9, 2026 - 18:10
 0  4
"உங்க கனவ சொல்லுங்க” திட்டம்: திருச்சியில் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் விழா"

திருச்சியில் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் நலன் மற்றும் நேரடி ஜனநாயகப் பங்கேற்பை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியான “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் செயல்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் சிறப்பான அரசு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

விழாவில், பொதுமக்களின் கனவுகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக அரசிடம் பதிவு செய்யும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு

கைபேசி இணைப்பு

விண்ணப்பப் படிவங்கள்

அடையாள அட்டைகள்

தொப்பிகள்

“கனவு அட்டைகள்”

ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டம் மக்களிடம் நம்பிக்கையுடன் அணுகி, பொறுப்புணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி (எ) கவிஞர் சல்மா, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கங்காதாரிணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்க கனவ சொல்லுங்க” திட்டம் மூலம், அரசு நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து, மக்களின் கனவுகள் அரசு கொள்கைகளாக மாறும் புதிய நிர்வாக கலாச்சாரம் உருவாகும் என விழாவில் பேசினர்.

மக்களின் குரலை நேரடியாக கேட்கும் இந்த முயற்சி, தமிழ்நாடு அரசின் மக்கள் மைய ஆட்சியின் இன்னொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor