கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சேலம் காவேரி மருத்துவமனை சாதனை
தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் குறைந்த செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வழங்குகிறது.
உடல் உறுப்பு தானம் மற்றும் உயிருடன் இருப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் ஆகிய இரண்டு முறைகளிலும் மொத்தம் 20 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சேலம் காவேரி மருத்துவமனை புதிய வரலாற்றைப் படைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை காவேரி மருத்துவமனை செய்து வருகிறது. இதனால் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் நவீன, தரமான கல்லீரல் சிகிச்சைக்காக பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவு, மூத்த பல்லுறுப்பு மாற்று சிகிச்சை (கல்லீரல், சிறுநீரகம், கணையம் மற்றும் சிறுகுடல்) நிபுணர் டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் இயங்குகிறது.ந
வீன உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ள இப்பிரிவில், கல்லீரல் நிபுணர்கள். மயக்க மருந்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர். கல்லீரலுக்கென்று ஒரு பிரத்யேகமான க்ளினிக் ஒவ்வொரு வாரம் புதன் அன்று காலை பதினோரு மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயங்குகிறது.
தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளதால் சேலம் காவேரி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சேவைகளை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குக் குறைந்த செலவில் வழங்கி வருகிறது.
இது குறித்து டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம் கூறுகையில், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை சேவைகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதை இலக்காக கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இப்பயணத்தில் இருபது வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் என்ற மைல்கல்லை எட்டியிருப்பது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. உயர்தர சிகிச்சைக்காக பெருநகரங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை இனி இல்லை என்ற புதிய நம்பிக்கையை இங்குள்ள குடும்பங்கள் மக்கள் பெற்றுள்ளனர். அதிநவீன சிகிச்சைகளைத் தொடர்ந்து வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தவிர, சேலம் காவேரி மருத்துவமனை கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய், வளர்சிதை மாற்ற மற்றும் வைரஸ் தொடர்பான கல்லீரல் கோளாறுகள், கணைய அழற்சி, கணைய புற்றுநோய் மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் உயர்தர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0