ஜோய் ஆலுக்காஸ் 'பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ' மதுரையில் 10 ஜனவரி முதல் 26 ஜனவரி 2026 வரை நடைபெறுகிறது
உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது 'பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ' மூலம் மதுரை மாநகரை மிளிரச் செய்ய தயாராக உள்ளது. 10 ஜனவரி 2026 முதல், மதுரை வெஸ்ட்வெளி ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான கண்காட்சி, வைர நகை உலகில் தலை சிறந்த கைவினைத் திறன், அழகு மற்றும் புதுமையின் அம்சங்கள் கொண்ட ஆபரணங்களின் உட்சபட்ச அனுபவத்தை தனது மதுரை ஜோய் ஆலுக்காஸின் வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது. அழகிய திருமண நகை கலெக்ஷன்கள் முதல், இன்றைய காலத்திற்கேற்ற டெய்லி வியர் கலெக்ஷன்கள் வரை பாரம்பரியத்தின் நித்தியமான அழகையும், புதுமையையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு வைர நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன. -
கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு கலை பொக்கிஷம்; இவை கண்காட்சி நடைபெறும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் கூறியதாவது:"பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ' என்பது வைரங்களின் நிரந்தர அழகிற்கும், நகை வடிவமைப்பில் முழுமையை நோக்கி பயணிக்கும் எங்களின் அர்ப்பணிப்பிற்குமான ஓர் அடையாளம். மதுரை மாநகரம் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. பண்டிகை காலத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வைர நகைகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்கும்."
உங்கள் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் கூடுதல் அழகை சேர்க்க, இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வைர நகை பர்ச்சேஸ்க்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
'பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ' மதுரை வெஸ்ட்வெளி ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் 26 ஜனவரி 2026 வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0