ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அரசுக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நன்றி
சேலம், ஜனவரி 8:
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில், ஆந்திர மாநிலம் ஈஸ்ட் கோதாவரி மாவட்டம் அருகே அமைந்துள்ள, ஆர்ய வைஸ்ய சமூகத்தின் குல தெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறந்த இடமான பெனுகொண்டா ஊரின் பெயரை “வாசவி பெணுகொண்டா” என மாற்றியமைத்த ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
சேலம் நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தன் தலைமையில் இந்த நன்றி தெரிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பெயர் மாற்றம், ஆர்ய வைஸ்ய சமூகத்தின் வரலாற்று, ஆன்மிக அடையாளத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3,000 சிறப்பு தொகை வழங்கும் அறிவிப்பு, அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது அல்லது கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் நேரடியாக போட்டியிடுவது குறித்து, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் நாகா ஆர். அரவிந்தன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் முரளி, கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக அடையாளம், அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பேசப்பட்ட இந்த செய்தியாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக அமைந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0