உருமு தனலட்சுமி கல்லூரியின் 1990- 1993 பொருளாதார மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி...
உருமு தனலட்சுமி கல்லூரியின் 1990- 1993 பொருளாதார மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி...

திருச்சி:
உருமு தனலட்சுமி கல்லூரியின் 1990-1993 ஆம் ஆண்டு பொருளாதாரம் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ். ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார் மற்றும் பேராசிரியர்கள் பெருமாள், கமர்ஜான் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் திலகர், டி. சொக்கலிங்கம் வாழ்த்துகளோடு இனிதே விழா நடைபெற்றது.
முன்னாள் பொருளாதாரம் துறை மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பேராசிரியர் எஸ்.எம். சூரியகுமார் நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது. பொருளாதாரம் மாணவர்கள் ஏற்பாடுகள் செய்து சிறப்பாக நடைபெற்றனர்.
இந்நிகழ்ச்சியை முருகானந்தம் ஏற்பாடு செய்திருந்தார். இறுதியாக ராஜசேகரன் நன்றி உரையாற்றினார். இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவெளிக்கு பிறகு வாழ்க்கையில் சிறந்தது நட்பா-உறவா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
What's Your Reaction?






