நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு...

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு...

Jan 6, 2025 - 14:40
 0  370
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு...

மதுரை:

நியோமேக்ஸ் (NEOMAX) நிறுவன மோசடி வழக்குகளை விரைந்து முடித்து பட்டுவாடா செய்வது தொடர்பாக முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் அந்த மனுவில் கூறியதாவது..

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து மாதம் மாதம் பணம் பெற்று வந்தோம் முதலீடு தொகைக்கு கடந்த மார்ச்-2023 முதல் இது நாள் வரை பணம் தரவில்லை. ஏஜென்ட்களிடம் கேட்டதற்கு கம்பெனி ஜூன்-2023 மாதத்தில் பணம் பட்டுவாடா செய்யாததன் பேரில் பலர் வழக்குப் பதிந்துள்ளார்கள் என கூறினார்கள். நீங்கள் வழக்கு பதிய வேண்டாம் எனக்கூறி கொஞ்சம் பொறுங்கள் நாங்கள் தருகிறோம் என பல மாதங்களாக ஏமாற்றி வந்தார்கள். நாங்களும் பொறுமையை இழந்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் மனு கொடுத்தோம் ஆனால் பெரும்பாலானோர்க்கு இதுநாள் வரை CSR or 161 or Statement கொடுக்கப்படவில்லை பொருளாதார குற்றப்பிரிவால் தொடரப்பட்ட வழக்கு எண் Cr.3/2023- நீதியரசர் தண்டபாணி அவர்களால் 10 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த
வில்லை. அதில் சில காலக்கெடுக்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதையும் பின்பற்றவும் இல்லை. வழக்கு வாய்தா வாய்தா என முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. எங்களில் பலர் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடி மக்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள். நாங்கள் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம்.மேலும் முதலீட்டாளர்கள் நகை மற்றும் வீட்டை அடமானம் வைத்து அவற்றை மீட்க முடியாமல் தவிக்கின்றோம் இதுவரை பல முதலீட்டாளர்கள் பணம் திரும்ப கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே வழக்கை இழுத்தடிக்கப்படாமல் விரைந்து முடித்து பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற வழிவகை செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று நியூ மேக்ஸ் குழும நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர் இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow