தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் ரம்ஜான் முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா...

தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் ரம்ஜான் முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா...

Mar 31, 2025 - 13:23
 0  10
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் ரம்ஜான் முன்னிட்டு புத்தாடை வழங்கும் விழா...

மதுரை:

"ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா" தமிழ்நாடு  தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் பள்ளியில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா ஜார்க், மாநில தலைவர் ஷெர்ஷா, மஸ்தான் திருநூருல்லா, சுரேஷ் பாண்டி, விழா ஒருங்கிணைப்பாளர் மாவட்ட செயலாளர் ராவியத்பேகம், முஹம்மது தையூப், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன், செயலாளர் பிரியா கிருஷ்ணன், சமூக சேவகி ஜோதியம்மா, கீதா கண்ணன், கண்ணன், ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வாழ்த்துரை வழங்கினார்.

 

ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow