கரும்பு இனிக்கிறது... கரும்பு விலை கசக்கிறது...!!

கரும்பு இனிக்கிறது... கரும்பு விலை கசக்கிறது...!!

Jan 10, 2025 - 19:16
Jan 11, 2025 - 10:38
 0  47

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவரும், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, ஒருங்கிணைப்பாளருமான ஏ.கே .ஆர் ரவிச்சந்தர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புடன் ஒற்றைக் கரும்பு வழங்கி வருகிறது. 

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பொங்கல் தொகுப்பில் பல பொருட்கள் வழங்கியதோடு இல்லாமல் ரொக்கமாக ரூபாய் 2500 வழங்கினார்கள். 

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் ரூபாய் 5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒற்றைக் கரும்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் விளைவித்த செங்கரும்பு ஒன்றுக்கு ரூபாய் 35 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அறிவிக்கப்பட்ட விலையில் வெட்டுக்கூலி ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வாகன வாடகை, பணியாட்கள் உணவுச் செலவு நிகழ்வு செலவு என அனைத்தும் உள்ளடக்கியது தான் ஒரு கரும்பின் விலை ரூபாய் 35.

 

அது மட்டுமில்லாது பொங்கல் செங்கரும்பை கொள்முதல் செய்யும்போது கூட்டுறவு துறை அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளின் விலை நிலத்திற்கு சென்று கரும்பை கொள்முதல் செய்வது கிடையாது, மாறாக இடைத்தரகர்கள் மூலம் பொங்கல் செங்கரும்பை கொள்முதல் செய்வதால் இடைத்தரகர்களுக்கு ஒரு தொகை போய் சேருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த ஒரு கரும்பின் விலை ரூபாய் 35 மேற்படி அனைத்து நிகழ்வு செலவுகளும் போக விவசாயிகளுக்கு ஒரு கரும்பிற்கு ரூபாய் 15 லிருந்து 18 வரை மட்டுமே கிடைக்கும். அதே வேளையில் மேற்படி செங்கரும்பு விவசாயிகள் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு கரும்பை விற்பனை செய்யும் போது ஒரு கரும்பு ரூபாய் 25 க்கு விற்கப்படுகிறது. மேற்படி கரும்பை தனியார் வியாபாரிகள் வாங்கிச் சென்று அவர்கள் ரூபாய் 30 வரை விற்பனை செய்கிறார்கள் எனவே அரசு அறிவித்த ஒரு கரும்பிற்கான விலையில் பாதி கூட விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. 

கரும்பு இனிக்கிறது கரும்பு விலை விவசாயிகளுக்கு கசக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு செங்கரும்பு க்கான விலையை மேலும் ஐந்து ரூபாய் அதிகமாக வழங்க வேண்டுகிறேன். 

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை விவசாயிகளிடமே இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்து விவசாயிகளே அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் கரும்பை கொண்டு வந்து இறக்கச் சொன்னால் விவசாயிகளே டிராக்டர் மூலம் அல்லது அவர்களே வாகன ஏற்பாடு செய்து கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். 

ஆண்டுதோறும் மகிழ்வாக கொண்டாடும் பொங்கல் விழாவில் சிறப்பான அங்கம் வகிக்கும் செங்கரும்பிற்கு உரிய விலை தராத தமிழ்நாடு அரசையும் முறையாக கொள்முதல் செய்யாத தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையையும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow