பள்ளி மாணவனை குற்றவாளியை போல உட்கார வைத்திருந்த பொன்மலை காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம்...
பள்ளி மாணவனை குற்றவாளியை போல உட்கார வைத்திருந்த பொன்மலை காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம்...
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவனை தாளாளர் தாக்கிய விவகாரத்தில் பெற்றோரின் அனுமதி இல்லாமல் பள்ளி மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து குற்றவாளியை போல உட்கார வைத்திருந்த பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் வினோத் என்பவரை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வந்தன அதன் ஒரு பகுதியாக எஸ்ஐ வினோத் மீது நடவடிக்கை எடுக்க கூறி திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக இந்திய மாவட்ட சங்கம் அறிவித்திருந்த நிலையில் மாநில தலைவர் சம்சீர் அகமது தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர் காவல் ஆணையர் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் மாநில இணை செயலாளர் ஜி கே மோகன் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் மாவட்ட செயலாளர் ஆமோஸ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
திருச்சி காவல் ஆணையர் எஸ்ஐ வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உடனடியாக எஸ் ஐ வினோத்திடம் விளக்க ஆணை சமர்ப்பிப்பதாகும் கூறியதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






