கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா...

கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா...

Apr 1, 2025 - 12:52
 0  100
கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா...

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா மற்றும் கலாச்சார பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது. இவ்விழாவில் ராய ஓம் சாரிடபிள் டிரஸ்ட் இரா.வையாபுரி உழவர் மன்றத் தலைவர்  A. V. கோபால தேசிகன் குமாரமங்கலம் அறக்கட்டளை நிறுவனர் ந. ராஜா சிதம்பரம் துணை ஆட்சியர் (ஓய்வு) அ. செல்வராஜ் ஆறுமுகம் SI (ஓய்வு) ஆசிரியர்  ரவிசந்திரன் ஆகியோர் தலைமை தாக்கினர் விழாவில் டாக்டர் கலைஞர் அரசுக் கல்லூரி பேராசிரியர் புவனேஸ்வரி குளித்தலை புதூர் கிராம நிர்வாக அலுவலர் அழகர் A.ராஜன் டிஎஸ்பி (ஓய்வு) கலைக்காவேரி கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்  இரா. வை. பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை சிறப்பு விருந்தினர்களாக  பிஷப் ஹீபர் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை தலைவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான டாக்டர்.மேஜர். ச.மணலி சோமசுந்தரம் அவர்கள் பெமினா ஷாப்பிங் மால் பெமினா ஹோட்டல்ஸ் மற்றும் பெமினா குரூப் அப் கம்பெனியின் M. D. ,C. E. O தொழில் அதிபர் .S.M.I.Md. அபுபக்கர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தார்.

கவின் கலைக்குழு நிறுவனர் கலைமாமணி இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. ஜெகதீசன் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகரும் & இயக்குநரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் வழக்கறிஞர் மா. வாசுதேவன் வழக்கறிஞர். சதிஷ்ஜான் தடகள விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் பாபு ஆ. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழாவில் கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியில் நடன பயிற்சி எடுத்து கொண்ட மாணவிகள் சு. கிரிஷிகா செ. சக்திவேல், சி.விபஞ்சனா, வி.தக்க்ஷா, சு.கார்த்திகா, ச.சாதனா ஆகியோரின் சலங்கை பூஜை பரத நடன அரங்கேற்றம் மற்றும் மாணவ மாணவிகள் சார்பில் தமிழக நாட்டுப்புற நடனம் இந்திய மாநில கலாச்சார நடனங்கள் நடைபெற்றது விழாவில்  கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் நிறுவனர் குரு.டாக்டர்.பேராசிரியர் இரா.வை. மரகதம் வையாபுரி  பொண்ணாடை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார் விழாவுக்கான ஏற்பாடுகளை கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகாடமியின் நிறுவனர் தலைமையில்  நிர்வாகிகள் ஆசிரியர்கள் இரா. வை. சுந்தரபாரதி, இரா. வை. பா. வசிருத்ராயர், பவித்ரா பாலா உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow