பள்ளி மாணவரை குற்றவாளியை போல காவல் நிலையம் அழைத்து வந்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு...

பள்ளி மாணவரை குற்றவாளியை போல காவல் நிலையம் அழைத்து வந்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு...

Mar 17, 2025 - 14:24
Mar 17, 2025 - 14:33
 0  271
பள்ளி மாணவரை குற்றவாளியை போல காவல் நிலையம் அழைத்து வந்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு...

திருச்சி:

பள்ளி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றவாளியை போல நடத்திய பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின் தாளாளர் அடிக்கும் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியானது பாதிக்கப்பட்ட மாணவன் பிரியன் காந்தியை பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் வினேத் என்பவர் இரண்டு காவலர்களை பள்ளி மாணவர் வீட்டிற்கு அனுப்பி  பெற்றோர் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி குற்றவாளியை போல காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டியுள்ளனர் இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் கூட இதுவரை காவல் உதவி ஆய்வாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow