டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் நிறுவனம் தனது முதல், ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது...

கோவை

Apr 25, 2026 - 15:05
 0  8
டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் நிறுவனம் தனது முதல், ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது...
டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் நிறுவனம் தனது முதல், ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்துள்ளது...

தமிழகத்தில் முதல் முறையாக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலிவே டைமண்ட்ஸ் நிறுவனம் தனது முதல், ஃபிளாக்ஷிப் ஷோரூமை திறந்தது. இதனை 
ஹெல்த் பேஸிக்ஸ் நிறுவனத்தின்  நிறுவனர் ஸ்வாதி ரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த நிறுவனம் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் திரிஷங்க் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது.. 
ஹைதராபாத் நிஜாம்களுக்கு கைவினை நகைகளை செய்து, 125 ஆண்டுகால அனுபவத்தை கொண்ட இந்த நிறுவனம், அதிநவீன புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் லேப்-கிரோன் வைரங்களைக் கொண்டு நவீன வடிவமைப்பு நகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், வைர நகைகளுக்கான உயர்ந்த ரகத்தை கோவையில், தங்களது நிறுவனத்தில் காட்சிபடுத்தியது. இங்கு  உயர்தர சோலிடேர், கலர்டு ஸ்டோன், மினிமலிஸ்ட் மற்றும் பாரம்பரிய பொல்கி, விக்டோரியன் கலெக்ஷன்கள் கிடைக்கின்றதாக கூறினார். 
விற்பனை நிலையத்தைத் தாண்டி, இந்த கோவை ஷோரூம், வைர நகைகளின் தனித்துவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்றார்.
மேலும் ஆடம்பரத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் அனுபவ மையமாக இந்த ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். இத்திறப்புவிழா நிகழ்ச்சியில், எலிவா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரஜய் மங்கன்லால், சக்தி ஃபைனான்ஸ் சர்விஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ருதி பாலசுப்ரமணியம் மற்றும் சந்திர பிரகாஷ் பன்சால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0