சாலை பாதுகாப்பு வார விழா: ஓட்டுநர்களுக்கு கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு – வாசன் கண் மருத்துவமனை முன்னெடுப்பு

கண் பரிசோதனை # சாலை பாதுகாப்பு

Jan 20, 2026 - 11:53
Jan 20, 2026 - 11:55
 1
சாலை பாதுகாப்பு வார விழா: ஓட்டுநர்களுக்கு கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு – வாசன் கண் மருத்துவமனை முன்னெடுப்பு

சேலம் | ஜனவரி 20

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம், சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் ஓட்டுநர்களிடையே கண் பரிசோதனையின் அவசியம், பார்வை தெளிவு, இரவு ஓட்டுநர் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை எடுத்துச் சொல்வதாக அமைந்தது. அதிகாரிகள் பங்கேற்பு  விழிப்புணர்வுக்கு வலு

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக

V. கோகிலா, வட்டார போக்குவரத்து அலுவலர், சேலம் மேற்கு

K. கிட்டு, காவல் ஆய்வாளர்,போக்குவரத்து பிரிவு, சேலம் மாநகரம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

அவர்கள் உரையாற்றும் போது,

“ஓட்டுநர்களின் பார்வை தெளிவாக இல்லையெனில் அது விபத்துகளுக்கு முக்கிய காரணமாக மாறும்.

காலந்தோறும் கண் பரிசோதனை மேற்கொள்வது ஓட்டுநர்களின் கடமை”என்று வலியுறுத்தினர்.

100-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை இந்த விழாவில்

👉🏻ஆட்டோ ஓட்டுநர்கள்

👉🏻 டாக்ஸி ஓட்டுநர்கள்

👉🏻கனரக வாகன ஓட்டுநர்கள்

உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனையில் பங்கேற்றனர்.

இதன் மூலம் பலருக்கு கண் பிரச்சனைகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் ஆலோசனை பாதுகாப்பான ஓட்டுநருக்கு வழிகாட்டல்,நிகழ்வில் வாசன் கண் மருத்துவமனையின்

டாக்டர் C. செல்வகுமாரி

டாக்டர் P. சந்தனா

டாக்டர் M. லாவண்யா

டாக்டர் P. சுவர்ணலதா

ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு,

1.கண் சோர்வு

2.இரவு பார்வை குறைபாடு

3.கண் கண்ணாடி பயன்பாடு

4. நீண்ட நேர ஓட்டுநர் பாதிப்புகள்

பற்றி விரிவான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

ஜனவரி 11 – பிப்ரவரி 11: ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை சாலை பாதுகாப்பு வார விழாவை சிறப்பிக்கும் வகையில்,வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி – ஒரு முன்னோடி முயற்சி.ஓட்டுநர்களின் கண் ஆரோக்கியம் என்பது தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்ல,பொது மக்களின் உயிர் பாதுகாப்பும் என்பதால், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.