கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கல்வி ஆண்டின் முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், புத்தகப் பைகள், விலையில்லா நோட்டு புத்தகங்களை வட்டாரக் கல்வி அலுவலர் மெக்ராஜ்பானு வழங்கினார்...

கந்தர்வகோட்டை

Jun 5, 2026 - 09:53
Jun 5, 2026 - 09:55
 0  21
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கல்வி ஆண்டின் முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், புத்தகப் பைகள், விலையில்லா நோட்டு புத்தகங்களை வட்டாரக் கல்வி அலுவலர் மெக்ராஜ்பானு வழங்கினார்...

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி ஆண்டின் முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் மெக்ராஜ் பானு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள்  வழங்கி அனைவரும் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என அறிவுரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில்  ஆசிரியர்கள் ரகமதுல்லா,மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா  வாழ்த்தி பேசினார். எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எங்கள் பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து பாடங்களுக்கும் கணினி மூலமாக கற்பித்தல் பணி நடைபெறுகிறது. மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வகை திறன் சார்ந்த கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்க மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் எங்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகின்றனர் .போட்டித் தேர்வு எழுதுவதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கிய தினங்கள் விழாக்கள் உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எங்கள் பள்ளியின் பணிகளை பாராட்டி கடந்த ஆண்டு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது.  பெற்றோர்கள் பள்ளி வயது குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0