தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்ப்பாக உழைப்பாளர் தினம் நிகழ்ச்சி...
திருச்சி
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கம் சார்பில் திருச்சி பால்பண்ணை மற்றும் கால பைரவர்கோவில் பகுதியில் எழுச்சியானவிழா நடைபெற்றது. விழாவில், சங்கத்தின் தலைவர் திருச்சி ஓம் சக்தி பாலமுருகன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து உழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தினார். கோடை வெயிலைத் தணிக்கும் விதமாக, அங்கிருந்த பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தர்பூசணி, மோர் மற்றும் லட்டு வழங்கி தொழிலாளர் தின வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.
இந்த உழைப்பாளர் தின விழாவானது
வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடாமல், உள்ள உள்ளூர் உழைப்பாளர்களின் நலன் காப்பதாக இருக்க வேண்டும் . ஓம் சக்தி பாலமுருகன் முன்வைத்த கோரிக்கைகள் முதன்மையாக அமைந்தன.
புறக்கணிக்கப்படும் உள்ளூர் திறமைகள்: இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், உள்ளூர் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இதன் மூலமாக அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது அரசின் கடமை.
வேலைவாய்ப்புகளில் முதலில் உள்ளூர் உழைப்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு பிராந்தியம் உண்மையான வளர்ச்சியை அடையும்.பால்பண்ணை மற்றும் கால பைரவர் கோவில் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் தொழிலாளர்களின் உரிமைக் குரலாக மாறியது. "உள்ளூர் உழைப்பை மதிப்போம், இதனால் அவர்களின் வாழ்வை உயர்த்துவோம்" என்ற கருப்பொருளில் அமைந்ததாகவும் அதனால் செய்தி, சமூக வலைதளங்களிலும் தொழிலாளர் அமைப்புகளிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1