விமானப் பயணிகளுக்கு இனி கூடுதல் கட்டணம் கிடையாது: மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு!
விமானப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இருக்கை தேர்வு மற்றும் பயணிகளின் வசதிகள் தொடர்பான சில முக்கிய மாற்றங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இலவச இருக்கை தேர்வு: விமானங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளைத் தேர்வு செய்ய இனி தனியாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருக்கை கட்டுப்பாடுகள்: ஜன்னலோர இருக்கை (Window Seat) அல்லது முன்பக்க இருக்கை (Front Row Seat) எனத் தனிப்பட்ட முறையில் இருக்கைகளைத் தேர்வு செய்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களுக்கு இனி கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குடும்பத்தினருக்கு முன்னுரிமை: ஒரே பிஎன்ஆர் (PNR) எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு, விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இசைக்கருவிகள்: பயணிகள் தங்களது விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எளிதாகக் கொண்டு செல்வதற்கான வசதிகளை விமான நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
தாய்மொழியில் தகவல்: விமானப் பயணம் தொடர்பான அனைத்து முக்கிய விவரங்களும் பயணிகளுக்கு அவர்களுடைய தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் நடுத்தர மற்றும் ஏழை எளிய பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0