திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு: உயர்மட்டக் குழு விசாரணை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

திருச்சி

May 23, 2026 - 15:26
 0  67

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் (MGMGH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி  திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த அறநிலை துறை  அமைச்சர் ரமேஷ், உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த செவிலியர் பள்ளியில் படித்து வந்த மாணவி சீதாலட்சுமி  மூக்கு எலும்பில் பிரச்சனை (Nasal Blockage) இருந்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையின் போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அந்த மாணவி துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார்.
உறவினர்கள் மற்றும் மாணவிகள் போராட்டம்:
மாணவியின் மரணத்திற்கு மருத்துவ அலட்சியமே காரணம் எனக் கூறி, சக செவிலியர் மாணவிகளும், உயிரிழந்த மாணவியின் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு & அதிரடி நடவடிக்கை: 
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அமைச்சர் ரமேஷ் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசியபோது:
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் என். பாஸ்கர் தலைமையில், சென்னை மருத்துவக் கல்லூரியின் ENT (மூக்கு, தொண்டை, காது), மயக்கவியல் மற்றும் பொது மருத்துவத் துறை பேராசிரியர்களை ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் உடனடியாக திருச்சிக்கு விரைந்து விசாரணையைத் தொடங்குவார்கள்.
மேலும், "ஆபரேஷன் தியேட்டரில் உண்மையில் என்ன நடந்தது? மயக்க மருந்து கொடுத்ததில் ஏதேனும் குறைபாடா அல்லது எதிர்பாராத மருத்துவச் சிக்கலா? என்பது இந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை வந்த பின்னரே இதனைப் பற்றி முழுமையாகத் தெரியவரும். விசாரணையில் தவறு நிரூபிக்கப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட மற்றும் துறை ரீதியான நடவடிக்கை பாயும்" அதனை அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0