உயிருக்கு பயந்து கதவை பூட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பெண் ஊழியர்கள்: சோமரசம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை....

திருச்சி

May 23, 2026 - 13:51
May 23, 2026 - 14:53
 0  228
உயிருக்கு பயந்து கதவை பூட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பெண் ஊழியர்கள்: சோமரசம்பேட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை....
உயிருக்கு பயந்து கதவை பூட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பெண் ஊழியர்கள்: சோமரசம்பேட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை....
உயிருக்கு பயந்து கதவை பூட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பெண் ஊழியர்கள்: சோமரசம்பேட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை....
உயிருக்கு பயந்து கதவை பூட்டி வைத்து சிகிச்சை அளிக்கும் பெண் ஊழியர்கள்: சோமரசம்பேட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை....

திருச்சி அருகே உள்ள சோமரசம் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பூட்டப்பட்டு இயங்கும் அதிர்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இரவு நேரப் பணிக்கு இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இரவு நேரக் காவலர் (Security Guard) பணியிடம் அமைக்கப்படவில்லை. இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகளும், குடிகாரர்களும்  இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அச்சுறுத்தி வருகின்றனர். குடிபோதையில் வரும் நபர்கள்அங்கேயே படுத்து உறங்குவதும்  பெண் ஊழியர்களிடம் வம்புக்கு இழுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இது குறித்து அங்குப் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தரப்பில் பேசுகையில், இங்கு எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. கயவர்கள் எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்ற அச்சத்திலேயே விடிய விடியப் பணியாற்றுகிறோம். இது குறித்து மேலிட அதிகாரிகளிடமும், உள்ளூர் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கின்றோம் என்று சொன்னார்கள் ஆனால் இதுவரைக்கும் எந்த தீர்வும் எடுக்கவில்லை மாவட்ட நிர்வாகம். உயிருக்கு அஞ்சி, வேறு வழியின்றி இரவு நேரத்தில் மருத்துவமனையின் வெளிக்கதவைப் பூட்டி விடுகிறோம். அவசர நோயாளி யாராவது கதவைத் தட்டினால் மட்டுமே திறந்து சிகிச்சை அளிக்கிறோம். அந்த ஆரம்ப சுகாதார வளாகத்தில் அருகிலுள்ள மருத்துவ கட்டிடங்களில் மின்விளக்கு எரியவில்லை அதனை சரி செய்யாததால்  இருளில் மூழ்கி கிடக்கின்றன  இதற்கு மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்கை  எடுக்கவில்லை என கூறினார்கள்  .  இந்த இரும்புப் பூட்டு மட்டும் தான் எங்களைக் பாதுகாக்கிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.ஏழை எளிய மக்களுக்குத் தங்கு தடையின்றி மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றால்,மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு சோமரசம் பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்கு நிரந்தரக் காவலரை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0