அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் 'மக்கள் அதிகாரம்' அமைப்பு சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி

Mar 11, 2026 - 14:34
 0  7
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் 'மக்கள் அதிகாரம்' அமைப்பு சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் 'மக்கள் அதிகாரம்' அமைப்பு சார்பாக திருச்சியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், துண்டுப்பிரசுரம் வாயிலாக முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:
 * போரை நிறுத்து: ஏகாதிபத்திய எண்ணெய் வளக் கொள்ளைக்காக ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளின் மக்களைக் கொல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
 * பொருட்கள் புறக்கணிப்பு: போர்வெறி பிடித்த அமெரிக்காவின் பொருட்களைப் புறக்கணிக்க உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 * மத்திய அரசுக்குக் கோரிக்கை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போட்டுக்கொண்ட அனைத்து ராணுவ, வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை:
போரினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு பின்வரும் எச்சரிக்கைகளை முன்வைத்தது:
 * போரினால் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதோடு, உடல் ஊனம் மற்றும் பொருளாதார அழிவு ஏற்படும்.
 * ராணுவச் செலவுகள் அதிகரிப்பதால் விலைவாசி உயர்ந்து சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
 * உணவுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் மக்கள் அகதிகளாக அலைய நேரிடும் சூழல் உருவாகும். இஸ்ரேலுக்கு பாஜக மத்திய அரசு ஆதரவு அளித்ததை தமிழக மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் போரின் காரணமாக அரசு இந்த போருக்கு காரணமானவர்கள்  பாதிப்படைவதில்லை  ராணுவத்தினர்கள் மற்றும் பொதுமக்களும் பாதிப் படுகின்றனர் நாட்டுத் தலைவருக்கும் அந்த நாட்டுத் தலைவருக்கும் சண்டை ஏற்பட்டால் அவர்கள்  அவர்களுக்குள்ளே மோதிக்கொள்ள மாட்டார்கள்   ஆனால் பொது மக்களை தாக்குவது மனிதநேயம் மற்ற செயல் இதை தடுப்பதற்கு பல்வேறு அமைப்பும் எதிர்ப்பும்  தெரிவித்தாலும் தொடர்ந்து போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த போரை சுபமுமாக முடித்து  மனிதநேயத்தை வளர்ப்பார்களா காப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்  இத்தகைய போர் நடக்காமல் இருக்க ஐநா சபை போன்ற அமைப்புகள் கூர்ந்து விமர்சித்து போரை நிறுத்த நடைமுறை செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கருதுகின்றனர் மற்றும் இந்த போர்களை நிறுத்த வேண்டும் என்பதை முதற்கட்ட கருத்தாக சில அமைப்புகள்,விஷயத்தை தெரிவித்து வருகின்றன

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0