ஐபிஎல் 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபி - எஸ்ஆர்எச் மோதலுடன் கோலாகலத் தொடக்கம்!

பெங்களூரு

Mar 28, 2026 - 13:26
Mar 28, 2026 - 11:42
 0  11
ஐபிஎல் 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபி - எஸ்ஆர்எச் மோதலுடன்  கோலாகலத் தொடக்கம்!
ஐபிஎல் 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபி - எஸ்ஆர்எச் மோதலுடன்  கோலாகலத் தொடக்கம்!

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் (IPL 2026) டி20 கிரிக்கெட் திருவிழா  பெங்களூருவில் மிகப்பிரமாண்டமாகத் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.கடந்த 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த ஆர்சிபி அணி, இந்த முறை நடப்பு சாம்பியனாகக் களம் காண்கிறது. தனது முதல் போட்டியையே பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில், சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகவும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்ய பிசிசிஐ (BCCI) அதிரடி முடிவு எடுத்துள்ளது. இருப்பினும், மே 31 அன்று நடைபெறும் இறுதிப்போட்டியின் போது பிரமாண்டமான நிறைவு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்சிபி (RCB): விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, அசுர பலம் கொண்ட பேட்டிங் வரிசையுடன் களம் இறங்குகிறது. சொந்த மைதானம் என்பதால் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
எஸ்ஆர்எச் (SRH): காயம் காரணமாக நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி புதிய உத்வேகத்துடன் களம் காண்கிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அந்த அணியில் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0