திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெறுகிவரும் விபாசாரம்: எல்லைப் பிரச்சினையால் முடங்கும் காவல்துறை – பொதுமக்கள் வேதனை!
திருச்சி கொள்ளிடம்
திருச்சி மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் கொள்ளிடம் பாலத்தின் தூண்கள் அமைந்திருக்கும் நடுபகுதிகள் தற்போது சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொள்ளிடம் பாலத்தின் ஓரத்தில் அடியில் மற்றும் கரையோர மறைவான பகுதிகளில் சில மாணவர்கள் மற்றும் நபர்கள் பொது இடமென்று பாராமல் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு: இப்பகுதி வழியாகச் செல்லும் நடைப்பயிற்சியாளர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு இது மிகுந்த மன உளைச்சலையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
இப்பகுதிகள் திருச்சி மாநகரம் மற்றும் ஊரகக் காவல் எல்லைகளுக்கு இடையில் வருவதால், புகார் அளிக்கும்போது காவல்துறையினர் எல்லையைக் காரணமாக காட்டி நடவடிக்கையைத் தள்ளிப்போடுகின்றனர். இதனால் குற்றவாளிகளுக்கு இது ஒரு 'பாதுகாப்பான இடமாக' மாறிவிட்டது.
இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் "நடவடிக்கை எடுக்கிறோம்" என்று வாய்மொழியாக உறுதி அளித்த போதிலும், எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை,தற்போது வரை களத்தில் எந்த மாற்றமும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை காட்டாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, மாநகர மற்றும் ஊரகக் காவல்துறையினரை ஒருங்கிணைத்து இப்பகுதிகளில் 'கூட்டு ரோந்து' மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
* தடுப்பு நடவடிக்கைகள்: பாலத்தின் தூண்கள் மற்றும் மறைவான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளை வைக்க வேண்டும்.
* தொடர் கண்காணிப்பு: காலை மற்றும் மாலை வேளைகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
பொது அமைதியையும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் இத்தகையச் செயல்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?
Like
12
Dislike
1
Love
2
Funny
0
Angry
1
Sad
3
Wow
1