தமிழக தேர்தல் 2026: வேட்புமனு பரிசீலனை - விஜய், ஸ்டாலின் மனுக்கள் ஏற்பு; சில வேட்பாளர்கள் நிராகரிப்பு!
தமிழ்நாடு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், (ஏப்ரல் 7) மாநிலம் முழுவதும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை (Scrutiny) நடைபெற்றது. இதில் முன்னணி தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சில முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் தீவிர பரிசீலனைக்குப் பிறகு, தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமைகளின் மனுக்கள் முறையாக ஏற்கப்பட்டன.தமிழகக் வெற்றிக் கழகம்:அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.திமுக:முதல்வர் மு.க. ஸ்டாலின்(கொளத்தூர்), அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களின் மனுக்களும் எந்தவித தடையுமின்றி ஏற்கப்பட்டன.அதிமுக: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) மற்றும் தவெக நட்சத்திர வேட்பாளராகக் கருதப்படும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிக்கோ இருதயராஜ் ஆகியோரின் மனுக்களும் பரிசீலனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டன.தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பாரி என்பவரின் மனுவில் சில முக்கிய இடங்கள் பூர்த்தி செய்யப்படாததால், தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை நிராகரித்தனர்.
நாடார் சங்கத் தலைவரான ஹரி நாடார் தற்போது சிறையில் இருப்பதால், சட்ட விதிகளின்படி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
களத்தில் எஞ்சியிருப்பது என்ன?
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரது மனுக்கள் நீண்ட நேரப் பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளன. ஒருசில தொகுதிகளில் சில வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் இன்னும் நிலுவையில் (Hold) வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீதான இறுதி முடிவு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9.அன்றைய தினம் மாலை வரை தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இதனை தேர்தல் ஆணையம் வெளியிடப்படும். இந்த வேட்புமனு பரிசீலனை முடிந்துள்ள நிலையில், இதனால் தமிழகத்தில் தேர்தல் களமானது பரபரப்பாக அமையப்படும். ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிற இருக்கிறது.அதற்கான பிரச்சாரம் முன்பை விட இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகின்றனர். மே 4 தேர்தல் முடிவுகளை அறிவிக்க இருக்கின்றனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0