தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் 'மனு பெட்டி' அமைப்பு....

திருச்சி

Mar 23, 2026 - 13:19
Mar 27, 2026 - 12:19
 0  5
தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் 'மனு பெட்டி' அமைப்பு....

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, மாவட்ட நிர்வாகப் பணிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேக 'மனு பெட்டி' வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) நடைமுறையில் இருப்பதால், வழக்கமாக நடைபெறும் வாராந்திர "மக்கள் குறைதீர்க்கும் நாள்" கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மனு பெட்டியில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களைச் செலுத்தலாம். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும்.
பரிசீலனை: பெறப்படும் மனுக்கள் உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0