வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொங்கல் விழா...

வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொங்கல் விழா...

Jan 12, 2025 - 20:35
Jan 12, 2025 - 20:40
 0  27
வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொங்கல் விழா...

திருப்பத்தூர்:

வெங்களாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் சங்கமம் திருவிழா காமெடி நடிகர் ஆதவன் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் சங்கமம் என்ற திருவிழா பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சிறப்பு விருந்தினராக காமெடி நடிகர் ஆதவன் கலந்து கொண்டு பொங்கல் திருவிழாவை சிறப்பித்தார். இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம், தாரை தப்பட்டை, மயிலாட்டம், குயில் ஆட்டம், மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் பூங்காவனம், சந்தியா, தலைமை ஆசிரியர் ஜலஜாக்கி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow