சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழா: அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு...
சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழா: அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு...
பழனி:
பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்குவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
பழனி அருகே தும்பலபட்டி ஊராட்சியில் உள்ள சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் உயர்கல்வித்துறைக்கு 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் இருக்கும் அனைத்து துறைகளிலும் கல்வித்துறைக்கு மட்டுமே அதிகபட்சமாக நிதி ஒதுக்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 20 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். பின்னர் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி பொன்ராஜ் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைவர் நடராஜன் செய்திருந்தார்.
What's Your Reaction?






