தாயனூரில் ப.ஜீவானந்தம் 63வது நினைவு தினம் – தைப்பொங்கல் விழா: விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தின் தாயனூர் கிளைகள் சார்பில், இலக்கிய பேராசான் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63வது நினைவு தினமும், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டும் சிறப்பு விளையாட்டு விழா 18.01.2026 அன்று மாலை 3 மணியளவில் தாயனூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தாயனூர் கிளைச் செயலாளர் தோழியர் S. லெட்சுமிபிரபா மற்றும் துணைச் செயலாளர் தோழியர் மங்கையர்க்கரசி ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவின் ஒரு பகுதியாக கோலப்போட்டிகள், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், சிறுவர் மற்றும் பெரியவர் கோலப்போட்டிகள், மியூசிக் சேர் போட்டி, பெண்களுக்கான மியூசிக் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடத்தப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R.முருகன், விளையாட்டுப் போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்குமான போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, இளைஞர்கள் சமூக முன்னேற்றத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் K.மேகராஜ், மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M.ரஜியாபேகம், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் தோழியர் A.இன்னசென்ட் விமலா மேரி, இளைஞர் மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தோழர் R. பீர் முஹம்மது, தரைக்கடை சங்க ஒன்றிய துணைத் தலைவர் தோழியர் K. தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மேலும் தாயனூர் கிளையைச் சேர்ந்த தோழியர்கள் லெட்சுமிபிரபா, மாரியாயி, மங்கையர்க்கரசி, அருணாதேவி, வின்மதி ஆகியோரும் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று பரிசளித்தனர்.
இவ்விழாவில் குழந்தைகள், மாணவ – மாணவிகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக தோழியர் மாரியாயி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0