திருச்சியில் முதன்முறையாக உலக தரத்திற்கு இணையான அஜந்தா போன்ற ஓவியங்களுடன் கூடிய மழலையர் பள்ளி கட்டிடம் துவக்கம்...

திருச்சிராப்பள்ளி

Jun 10, 2026 - 19:39
 0  23

திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் உள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான புதிய பிரம்மாண்டமான கட்டிடம் சிறு குழந்தைகள் கல்வி கற்றலை இணைச் செயல்பாடுகளுடன் எவ்வாறு கற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மாதிரி மற்றும் மாணவர்களை கவர் வண்ணம் பிரம்மாண்டமான கை வண்ணத்துடன் கூடிய ஓவியங்களை வைத்து கல்வியினை செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மழலையர் பள்ளி கட்டிடத்தை பாளையங்கோட்டை சர்வைட் மரிய நட்சத்திர- மாநிலத் தலைவி மரிய ஜாய்சி பேபி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இவ்விழாவில் கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி, மூன்று பள்ளிகளின் தாளாளர் அருட் சகோதரி டெய்ஸி, புனித ஆக்னஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சகோதரி சாந்தா புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஜான்சி , புனித வளனார் மழலையர் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியை மெர்சி ஆகியோர் கலந்து கொண்டனர் இவ்விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இப்பள்ளியில் மழலையர் பள்ளி சேர்க்கை மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இப்பள்ளி தனி பெரும் பள்ளியாக பொன்மலைப்பட்டி வட்டாரத்தில் திகழ்ந்து வருகிறது ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் இப்பள்ளியில் படித்து சமுதாயப் பணியிலும் சமூக பணியிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1