மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறைக்கு எதிராக கன்னடம் தெரிவித்த இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம்...
திருச்சி
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தது குறித்து,இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் திருச்சி இன்று பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கறிஞர் மெல்டியூ, நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அதில்ஆயிரம் ஆண்டுகள் பழமையான மலைக்கோட்டை தெப்பக்குளத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் இருந்துதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிற நிலையில், தற்போது சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர் வழங்குவதாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இதனை கூறுவது என்பது ஏற்புடையது அல்ல.மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி, ஆணையரும் தண்ணீர் காவேரியில் இருந்து கொண்டு வர இயலாது என பொய்யாக கூறுவதை ஏற்க முடியாது. மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலைத்துறை தவறான நிர்வாகத்தினால் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில், குளத்திற்கு தண்ணீர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருதற்கும், தண்ணீரை வெளியேற்றுவதற்கு வசதிகள் உள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என நீதிமன்றத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மன்னர் காலத்தில் சின்டெக்ஸ் டேங்க் இல்லாத நிலையில் தற்போது அதிகாரிகள் சின்டெக்ஸ் டேங்க் கொண்டு தான் தண்ணீர் நிரப்புகிறோம் என கூறுவது ஏற்புடையது அல்ல. கோவில் நிலங்களையும் தெப்பக்குளத்தையும் பராமரிப்பதில் அரசு தவறிவிட்டது.திருச்சிமாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு எதிராக சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம் திருச்சிமலைக்கோட்டையை சுற்றிலும் அகழி இருப்பதற்கான ஆதாரங்கள் 1966ல் பதிவேட்டில் உள்ளது, காலப்போக்கில் அது ஆக்கிரமிப்புகளால் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. இந்து சமய அறநிலைத்துறை மெத்தனத்தினால் தான் பல்வேறு கோவில்களையும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களையும் இழந்து வருகிறோம். புராதான சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை தவறிவிட்டது. மேலும் அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை கிடையாது, தனிநபர்கள் லாபத்திற்காக அறநிலையத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமானபுராதான சின்னங்கள் அழிக்கப்பட்டு விட்டது மேலும், தெப்பக்குளத்தை தூர்வாரும் மற்றும் பராமரிக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டாம். கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்காமல் இருந்தாலே போதுமானது என தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். இந்தபேட்டியின் போது இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கத்தின் செயல் தலைவர் வையாபுரி,மாநகர் மாவட்ட தலைவர் நாராயணன் ,புறநகர் மாவட்ட தலைவர் வரதன் ஆகியோர் உடன் இருந்தனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0