தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா...

தஞ்சாவூர்

Mar 13, 2026 - 17:46
Mar 13, 2026 - 16:18
 0  8
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா...

 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) முனைவர் இரா.சு.முருகன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலான தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயர்ப்பு எனும் நூல் தமிழில் வினைச் சொற்கள், பயினிலைகளை மொழிபெயர்த்தல், செயப்பாட்டு வினைகளை மொழிபெயர்த்தல், வருணனை வாக்கியங்களில் மொழிபெயர்ப்பு, நீண்ட தொடர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள், தொடர்களை மொழிபெயர்த்தல், எடுத்துக்காட்டான மொழிபெயர்ப்புகள் சில மற்றும் மொழிபெயர்ப்பாளர் அடையும் சிக்கல்கள் ஆகிய பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நூலை துணைவேந்தர் குழு உறுப்பினர்   மருத்துவர் முனைவர் பெ.பாரதஜோதி,   தலைமையேற்று வெளியிட, பதிவாளர் (பொ.) .கோ.பன்னீர்செல்வம்  முன்னிலை வகித்து முதல் நூலை பெற்றுக்கொண்டார்கள். இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரும் நூலாசிரியர், மேலும் பல நூல்களை எழுத தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டினார்கள்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0