பிஷப் ஹீபர் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திருச்சி, ஜூலை 8:
திருச்சி மாநகர காவல்துறை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை புதன்கிழமை பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிஷப் ஹீபர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
காலை 11.20 மணி முதல் 11.40 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் எஸ். பாலகிருஷ்ணன், "போதைப்பொருள் பழக்கம் தனிநபரின் வாழ்க்கையை மட்டுமின்றி குடும்பம் மற்றும் சமூகத்தின் அமைதியையும் சீரழிக்கிறது. மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து போதைப்பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாகமும், திருச்சி மாநகர காவல்துறையும் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. போதை இல்லாத, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவடைந்தது.