வேலை தேடி வந்த குடும்பம்… கல்லூரி வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்! சென்னையை உலுக்கிய பீகார் இளைஞர் குடும்பக் கொலை – சிறப்பு புலனாய்வு
“ப்ளீஸ்… என்னை விட்டுவிடுங்கள்” ஒரு இளம் பெண்ணின் கடைசி கதறல்,
“அப்பா…(Papa)அப்பா…(Papa)”இரண்டு வயது குழந்தையின் அழுகை—
இந்த இரண்டுமே இன்று தமிழகத்தை உலுக்கிய ஒரு கொடூர சம்பவத்தின் மௌன சாட்சிகளாக மாறியுள்ளன.வேலை கனவுடன் சென்னை வந்த குடும்பம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24).மனைவி முனித குமாரி (20),2 வயது மகன் பிரமினி குமார்.வறுமையை வெல்லும் கனவுடன், வேலை தேடி சென்னை வந்த அந்த குடும்பம், தங்கிய இடத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கு மூட்டையில் கிடந்த சடலம் – தொடங்கிய விசாரணை
கடந்த ஜனவரி 26, சென்னை அடையார் – இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கிடந்த சாக்கு மூட்டையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.
சிசிடிவி காட்சிகளில்,
👉 இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாக்கு மூட்டையை வீசி சென்றது பதிவாகியிருந்தது. இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஒரு காகிதம்,அதில் அடையாரில் இயங்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் தொலைபேசி எண்********.அதுவே விசாரணையின் திசையை மாற்றியது.
கவுரவ் குமார் – அடையாளம் உறுதி போலீசார் நடத்திய விசாரணையில்,
இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டது.அவர் சென்னையில் வேலை தேடி வந்ததும்,அவருடன் மனைவி, குழந்தை வந்ததும் தெரிய வந்தது.ஆனால்…
👉 மனைவி மற்றும் குழந்தை எங்கே?
இந்த கேள்வியே போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு இட்டுச் சென்றது.
நண்பன் பெயரில் வந்த நம்பிக்கை…
அடையாரில் துணிக்கடையில் பணியாற்றி வந்த பீகார் நபர் கிருஷ்ண பிரசாத் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.அவரது வாக்குமூலம் அதிர்ச்சிகரமாக இருந்தது.கவுரவ் குமார் முன்பு ஸ்ரீபெரும்புதூரில் காவலாளி வேலை பார்த்துள்ளார்,வேலை இழந்ததால் சொந்த ஊர் திரும்பியுள்ளார் மீண்டும் வேலை கிடைக்க வேண்டும் என்று கிருஷ்ண பிரசாத்தை தொடர்பு கொண்டுள்ளார்,அதன் பேரில் ஜனவரி 21 அன்று மனைவி, குழந்தையுடன் சென்னை வந்துள்ளார்,கல்லூரி வளாகத்தில் கொடூரம் வேலை கிடைக்காத நிலையில்,கிருஷ்ண பிரசாத் கூறியதன் பேரில்,தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றும் சிக்கந்தர் என்பவரை கவுரவ் குமார் சந்தித்துள்ளார்.
👉 “வேலை கிடைக்கும் வரை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்”என்று கல்லூரி வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அங்கேதான்…இந்த குடும்பத்தின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மது விருந்தாக மாறிய மரண இரவுஜனவரி 24 மதியம்,சிக்கந்தர் தனது நண்பர்களுடன் அங்கு மது அருந்தியுள்ளார்.அப்போது—
👉 கவுரவ் குமாரின் மனைவியிடம் அத்துமீறிய நடத்தை
👉 அவர் மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்
👉 கணவன்–மனைவி கடுமையாக எதிர்த்தல்
இதன் முடிவு—
இரும்பு கம்பியால் தாக்குதல்.கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தையும்,அந்த கொடூரத்திலிருந்து தப்பவில்லை.சாக்கு மூட்டைகள் சிதறிய சடலங்கள் மூவரின் உடல்களையும் தனித்தனியாக சாக்கு மூட்டைகளில் கட்டி,
👉🏻குழந்தையின் சடலம் – கழிவுநீர் கால்வாயில்
👉🏻மனைவியின் சடலம் – பெருங்குடி குப்பை மேட்டில்
👉🏻கவுரவ் குமாரின் உடல் – கடலில் வீச முயன்று தோல்வி இவ்வாறு,ஒரே குடும்பத்தின் உடல்கள் சென்னை நகரின் பல பகுதிகளில் சிதறடிக்கப்பட்டுள்ளன.
5 பேர் கைது தொடரும் விசாரணை,இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாக,
சிக்கந்தர்
நரேந்திர குமார் (45)
ரவீந்திரநாத் தாகூர் (45)
விகாஷ் (24)
மேலும் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை, பாதுகாப்பு, நம்பிக்கை—
இந்த மூன்றையும் தேடி வந்த ஒரு இளம் குடும்பம்,
பாலியல் வன்கொடுமை அத்துமீறல், மனிதாபிமானமற்ற கொடூரத்தின் பலியாக மாறியுள்ளது.
👉 “வேலை தேடி வந்த இடம்… உயிரை பறித்த இடமாக மாறியது”
இந்த சம்பவம், சமூகத்தில் வேலை தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0