200 பேரின் பசி தீர்க்க வழியின்றி திருச்சி மாற்றுத்திறனாளிகள் காப்பகம் தவிப்பு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
திருச்சி
திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகரில் இயங்கி வரும் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் நல மையம் (Loubra Blind & Disabled Welfare Centre) தற்போது பெரும் உணவு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.இந்த மையத்தில் பார்வையற்றோர், முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கிப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான தினசரி உணவு தயாரிப்பிற்குச் சமையல் எரிவாயு (Gas Cylinder) மற்றும் மண்ணெண்ணெய் இன்றி கடந்த சில நாட்களாக நிர்வாகம் திணறி வருகிறது.இது குறித்து மையத்தின் நிர்வாக இயக்குனர் பி. தாமஸ் கூறுகையில், எங்கள் மையத்தில் தங்கியுள்ள 200 பேருக்கு உணவு சமைக்க எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச் 30-ம் தேதியே மாவட்ட நிர்வாகத்திடம் முறையான மனு அளித்தோம். ஆனால், மனு அளித்து 20 நாட்கள் கடந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இங்குள்ளவர்களின் பசியைப் போக்குவது எங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது நிலவும் அவசரச் சூழலைக் கருத்தில் கொண்டு உடனடியாக 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையலுக்கு தேவைக்கான 200 லிட்டர் மண்ணெண்ணெய்
ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து அதனை தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான சிலிண்டர் மட்டும் மண்ணெண்ணெய் அளிக்க நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0