தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

Jan 7, 2025 - 16:25
 0  38
தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கேலிச்சித்திர போஸ்டர் 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் நாள் கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையை படிக்காமலேயே பேரவையிலிருந்து வெளியேறினார், இது சட்டமன்ற மாண்பை மதிக்காத செயல் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், இதையடுத்து தஞ்சாவூரில் திமுக கட்சி சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் முன்னாள் எம்பி பழநிமாணிக்கம் தலைமையில் தமிழக கவர்னர் ஆர் என் ரவியை கண்டித்தும், இதற்கு துணை போகும் பாஜக, அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், இந்நிலையில் தஞ்சாவூர் முழுவதும் இபிஎஸ், ஆர்.என்.ரவி கேலிச்சித்திர  உருவப்படத்துடன், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர், அவரை காப்பாற்றும் அதிமுக, பாஜக கள்ளக் கூட்டணி என்ற வாசகத்துடன்,

SIR நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன், நீங்க நேக்கா வெளிய போயிடுங்க என்றும் சூப்பர்யா நீதான்யா உண்மையான விசுவாசி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow