சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி திராவிட கழகத்தினர் புகார்...
சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி திராவிட கழகத்தினர் புகார்...
தஞ்சாவூர்:
சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மாவட்ட எஸ்.பி யிடம் திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான திராவிடர் கழகத்தினர் புகார்:
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ராஜாராமிடம் திராவிடர் கழகத்தினர் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர்.
இது குறித்து ஜெயக்குமார் - தி.க மாநில ஒருங்கிணைப்பாளர் - கூறுகையில்
சீமான் வடலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெரியார் பெண்கள் குறித்து மிகவும் தவறாக கூறியதாக பேட்டியளித்துள்ளார்
அது போன்ற கேவலமான பேச்சினை தந்தை பெரியார் பேசியதும் இல்லை எழுதியதும் இல்லை சீமான் திட்டமிட்டு பெரியாரின் நன்மதிப்பை குலைக்கும் வகையிலும், அவரது புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் பேட்டியளித்துள்ளார்
சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வனகயில் சீமான் பேசியதால் சீமானை கைது செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாம் தமிழர் கட்சியின் யூடியூப் பிலும் சீமான் பேச்சு இருக்கிறது அதனை உடனடியாக அழித்திட வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?






