உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முறைகேடு - திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி

Mar 11, 2026 - 15:00
 0  12
உயர் பதவிகளில் இடஒதுக்கீடு முறைகேடு - திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ் (IAS), ஐ.பி.எஸ் (IPS) மற்றும் ஐ.எஃப்.எஸ் (IFS) ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையீடுகளைச் சரியாகப் பின்பற்றாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (பார்ப்பனர்கள்) மட்டுமே உயர் அதிகாரிகளாக அமர்த்தப்படுவதைக் கண்டித்து திருச்சியில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிட கழகம் திருச்சி மாவட்டக் கிளை சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் திராவிட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
  மத்திய அரசுப் பணிகளில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை.
  உயர் அதிகாரப் பதவிகளில் சமூக நீதி மறுக்கப்பட்டு, குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
  இது ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் செயல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
திருச்சி ரயில் நிலையம் முன்பாகத் திரண்ட திராவிட கழகத்தினர், மத்திய அரசுக்கு எதிராகவும், சமூக நீதியை நிலைநாட்டக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். "உயர் பதவிகளில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்திப் பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் கண்காணித்தனர்.
 முறைகேடான இட ஒதுக்கீட்டில் பிராமண மக்களை மற்றும் உயர் பதவியில் நியமனம் செய்து வருகின்றனர் இத்தக முறையினால் பல்வேறு சமூகத்தினரும் ஆதிதிராவிடர்களும் மற்றும் பிற்படுத்தோர் சமூகத்தினரும் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர் இத்தகைய ஜாதி அடக்குமுறைகளும் சனாதனம் மறைமுகமாக செய்து வருகிறது இதனை கண்டித்து திராவிட கழகம் சார்பாக தமிழக முழுவதும் இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் திராவிட கழக ஆசிரியர் வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதை குறிப்பிட்டுள்ளோம் இதனால் தான் இட ஒதுக்கீடு முக்கியம் என்று சொல்லி வருகிறார்கள் இட ஒதுக்கீடு மூலம் பல்வேறு பணி நியமனம் செய்வதால் பல்வேறு சமூக மக்கள் ஆதிதிராவிடர்கள்  பயன் அடைகிறார்கள் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி இத்தகைய இட ஒதுக்கீடு தடுத்து நிறுத்தி ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் உயர் பதவியில் நியமிக்கிறது. மத்திய  அரசினைக் எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம், இட ஒதுக்கீடுகளை நேர்மையாகப் பின்பற்றுமா என்று காத்திருந்து பார்க்கலாம்

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0