தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு!

கோவை

Mar 30, 2026 - 11:03
 0  19
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர்களும் தங்களது விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். கட்சி சார்பாக, மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தங்களது விருப்ப மனுக்களை வரும் 6ம் தேதி வரை வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கோவை மண்டலங்களான, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட துடிப்பான இளைஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்ப மனுவை வழங்கலாம் என தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில தலைவராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுச்சி புயல் சக்தி வேல் இருந்து வருகின்றார். எங்களது கட்சி துவங்கி 20 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது இன்னும் ஒரிரு நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மாநில தலைவர் அறிவிப்பார் என தெரிவித்தார். மேலும் கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக நான் போட்டியிடுகின்றேன் எனவும் மற்ற சட்ட மன்ற தொகுதிகளுக்கு விருப்பமுள்ள, ஆர்வமுள்ள, பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் என்னை அழைக்கலாம் என தெரிவித்தார். இதற்காக 9994684248 அல்லது 9751389368 என்ற எண்ணில் அழைத்து தெரியப்படுத்தவும் என கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் தொகுதி  வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு பலரும் சால்வை அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியின் பொழுது 
வழக்கறிஞர் குமாஸ்தா செல்வராஜ், காங்கிரஸ் கட்சி பால்ராஜ், பாலமுருகன், தினேஷ், கனேஷ், சிங்காரவேல், பைனான்ஸியர் பெருமாள், முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0