நியாய விலைக் கடையில் அதிகாரிகள் விதிமுறை மீறல்...

ராணிப்பேட்டை

Apr 25, 2026 - 10:38
 48
நியாய  விலைக் கடையில் அதிகாரிகள் விதிமுறை மீறல்...

நியாய  விலைக் கடையில் விதிமுறை மீறல்? – பதிவு செய்யாமல் மண்ணெண்ணெய் வழங்கியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம், இரத்தினகிரி அடுத்த நந்தியாலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வழக்கம்போல் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்கள் பெற காத்திருந்தபோது, திடீரென கடை அதிகாரிகள் “பயோமெட்ரிக் மெஷின் செயல்படவில்லை” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொண்டு, பதிவு செய்யாமல் மண்ணெண்ணெய் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ரேஷன் கார்டை கொடுத்து விட்டு செல்லுங்கள், பின்னர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்” என்று அதிகாரிகள் கூறியதாகவும், இது விதிமுறைக்கு எதிரானது என சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.