பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக உணவு பொருட்கள் வழங்கும் விழா!

ஈரோடு

Apr 3, 2026 - 14:22
 0  33

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சக்தி வாய்ந்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல் இந்த வருடமும் குண்டம் பெருந்திருவிழா நடைபெற்றது.இந்த குண்டம் பெருந்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தண்ணீர் பாட்டில், பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவை கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் , சொர்க்கபுறம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சுவாமிகள் , ஶ்ரீ மத் பரமஹம்ஹேத்யாதி ஶ்ரீ ரங்க பராங்குச பரகால நம்பி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள்.பக்தர்கள் வரிசையில் நின்று வந்து உணவு பொருட்களை பெற்றுக் கொண்டு சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் நன்றி தெரிவித்து சென்றனர்.இந்த விழா ஏற்பாடுகளை  சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனையின் படி சங்கத்தின் பொறுப்பாளர்கள்  செந்தில்குமார் ,நடராஜ் , நித்தியானந்தன், குப்புராஜ் , சத்யபிரகாஷ் , ஆனந்தன் , சுமதி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0