மாடர்ன் பிசியோதெரபி மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா...

தஞ்சாவூர்

Mar 15, 2026 - 16:40
Mar 15, 2026 - 16:42
 0  57
மாடர்ன் பிசியோதெரபி மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா...

தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகே மல்லிகா நகரில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட் மாடர்ன் பிசியோதெரபி

மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

 மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார்,இயக்குனர் கவிதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,வேந்தர் சேதுராமன்,பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 

என் .ஆர் ரங்கராஜன், ஆர் பி ஐ சி மற்றும் வழிகாட்டி ரமேஷ் பாபு, .மாவட்ட ஆளுநர் லியோன்,,தமிழ்நாடு,இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கம்,

மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார்,

ஆகியோர் மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தனர்.

தஞ்சாவூர் மாநகர மேயர் 

சண். ராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மகாராஜா சில்க்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, .டாக்டர்கள் பாரதி லியோ ஜோசப் ,வி பி சரவணன்,முரளி ராஜராஜன்,காமாட்சி மருத்துவமனை இந்திரா ராஜ் தனபால்,உள்பட பலர் கலந்து கொண்டனர். 10படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையில் மூளை, முதுகுத் தண்டு, நரம்புகள், எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள், தசைகள் மற்றும் தசைநாண்கள் அல்லது உடலியல் செயல்பாடுகளை பாதிக்கும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு செயல்பாட்டு திறன் ,சிறப்பு எலும்பு சிகிச்சை, சிகிச்சை, பொது மருத்துவம் உள்ளிட்ட நவீன முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0