அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்...
திருச்சி
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கர் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கருமண்டபம் நேரு நகர் முதல் தெரு கணேஷ் மெஸ்சில் 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை அகில பாரத ஐயப்ப சேவா சங்க தேசிய செயலாளர், தமிழ் மாநில இணைச் செயலர் மற்றும் திருச்சி மாவட்ட செயலர் திரு ம.ஸ்ரீதர் மற்றும் திருச்சி மாவட்ட போசகர் N.V.முரளி,மாவட்ட பொருளாளர் சுரேஷ், அலுவலக செயலாளர் அம்சாராம், சரக தலைவர் ராஜகோபால்,சரக செயலர் இளங்கோவன், திருச்சி மாவட்ட மருத்துவ அணி தலைவர் மருத்துவர் மனோகர்,கருமண்டபம் கிளை நிர்வாகிகள் மற்றும் சரகம் ஒன்றைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கண் மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.