அருள்மிகு அரங்கநாத சுவாமிக்கு நெய்க்கார யாதவர்களின் நெய் கைங்கர்யம்......
திருச்சி
திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த யாதவர்கள், தங்களின் பாரம்பரியமான நெய் வழங்கும் சேவையை (கைங்கர்யம்) ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.எடத்தெரு பகுதியில் வசிக்கும் யாதவர்கள் அதிகளவில் பசுக்களை வளர்த்து வருவதால், அவர்கள் வீடுகளில் எப்போதும் பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் நிறைந்து இருக்கும். இதன் காரணமாக இப்பகுதி யாதவர்களுக்கு "நெய்க்கார யாதவர்கள்" என்ற சிறப்புப் பெயர் உருவானது.
பன்னெடுங்காலமாக அரங்கநாத சுவாமிக்கு நெய் வழங்கும் பழக்கம் இருந்து வந்தது. இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பாரம்பரியத்தை, தற்போதுள்ள யதுகுல இளைஞர்கள் பெரும் முயற்சி எடுத்து மீண்டும் தொடங்கி வைத்துள்ளனர்.கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் சுவாமிக்கு நெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நெய் கோயிலில் தீபங்கள் ஏற்றவும், பிரசாதங்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
* பங்குனி மாதப் பிறப்பு: சமீபத்தில் சித்திரை மாதப் பிறப்பை முன்னிட்டு இந்த நெய் கைங்கர்யம் சிறப்பாக வழங்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள்:
இந்த நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, அவரது கணவர் தனுஷ்கோடி மற்றும்மா. கோவிந்தராஜூ, (எ)ஜி எடத்தெரு லோ. முத்துகிருஷ்ணன்
உரக்கடை ராஜகோபால்,S.சரவணன்,S.சேதுராமன்,Psk. கண்ணன்,S.கோபி இராமநாதன்,பார்த்தசாரதி,ரகுராம்சந்தோஷ்,வெங்கடஷ்,
சேது,குபேரன் முக்கிய பிரமுகர்களும் நெய்க்கார யாதவ சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர். இதுபோன்ற நெய்களையும் காணிக்கையாக கொடுத்து வருவதால் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு பயன்களும் அடைகின்றனர் இதற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நன்றிகளையும் கோயில் நிர்வாகம் மட்டும் மக்கள் அறிவித்துள்ளனர்